10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.

1208 Views

10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.

தமிழக சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடிந்த ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் மனிதநேயக் கோரிக்கையாகும்.

தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 27 ஆண்டுகளை நிறைவு செய்த 7 தமிழர்கள், மற்றும் 22 ஆண்டுகளாக சிறையில் உள்ள 44 முஸ்லிம்கள்
உள்ளிட்டவர்களையும்; தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவேண்டும்,என்கிற கோரிக்கை சிறைவாசிகள் முதுமையின் இயலாமையாலும்; மற்றும் நிரந்தரமாக நோயுற்றுள்ளவர்களின் நிலையை, கருத்தில் கொண்டு வைக்கப்படுவதாகும்.

மேலும் “கொரானா வைரஸ்” உலகையே உலுக்கி மனித உயிர்கள் மதிப்பற்று மாண்டு வரும் சூழலில், மக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனர்; தற்போது தமிழ் நாட்டின் சிறைகளிலும் கொரானா உயிர் கொல்லி நோய் தொற்று பரவிவருகிறது என்கிற செய்தி இன்னும் கவலையளிக்கிறது.

இந்நிலையில் ‘தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி’ ஒருங்கிணைப்பில் 10 ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் சிறைவாசிகளை மத,இன, பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் மே 31 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு “இணையவழிப் போராட்டம்” நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் நமது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களும்,தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குனங்குடி ஆர் எம் அனிபா அவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.இது மிக முக்கியமான கோரிக்கையாக இருக்கிறக் காரணத்தால் இப்போராட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய மக்கள் கட்சியின் சகோதரர்கள் பங்கேற்று கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்;
ப.அப்துல் சமது
பொதுச்செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply