பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

122 Views
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் 12000 பேரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகப் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2011ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி ஓவியம் மற்றும் தொழிற்கல்வி (தையல், இசை, கணினிஅறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி) பாடங்களை பயிற்றுவித்து வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7700 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாகக் குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் ஊதியம் மிகக் குறைந்த வருவாயையே கொடுக்கும் இதுபோன்ற குறைவான வருவாயை மூலம் பகுதிநேர ஆசிரியர்கள்   அவர்களின் வாழ்வாதார செலவுகளைப் பூர்த்தி செய்ய இயலாது.

எனவே, கடந்த 10 ஆண்டுகளாகக் குறைவான ஊதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தமாக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply