கொரோன பரவலைத் தடுக்க தவறியதுடன் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ள எடப்பாடி அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்

372 Views

கொரோன பரவலைத் தடுக்க தவறியதுடன் டாஸ்மாக்  கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ள எடப்பாடி அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை

இன்று திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பாக கொரொனா பரவலைத் தடுக்க தவறிய  அதனை மேலும் பரவலாக்கும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் தம் வீட்டிற்கு முன்பு இந்த போராட்டத்தை;தை தமிழகம் முழுவதும் நடத்தினார்கள். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா சென்னையில் உள்ள தனது இல்லம் முன்பு இந்த போராட்டத்தை நடத்தினார்.

இப்படிக்கு

மாயவரம் அமீன்

தலைமை நிலையச் செயலாளர்

மனிதநேய மக்கள் கட்சி

7 வடமரைக்காயர் தெரு

சென்னை 600 001

Leave a Reply