அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

513 Views
அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய் தொற்றால் மரணித்தார் என்ற செய்தியறிந்து  துயரம் அடைந்தேன்.

சென்னை மாநகராட்சி நகர்மன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய வெற்றிவேல் அவர்கள் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

திரு. வெற்றிவேல் அவர்களை இழந்து வாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply