18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நிதிபதி அதிவிரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1462 Views
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு:
மூன்றாவது நிதிபதி அதிவிரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
18 mlas
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 18 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் அறிவித்த 9 மாதங்கள் கழித்து இன்று அந்த வழக்கில் சென்னை நீதிமனறத்தின் முதல் அமர்வு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
இச்சூழலில் இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நமது இந்திய நீதி பரிபாலன முறையில் உள்ள மந்தப் போக்கிற்கு எடுத்துக்காட்டாக இன்று வெளிவந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
18 சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதிகளே இல்லை என்ற சூழல் 9 மாதங்களாக நிலவி வருகின்றது. இதனைக் கருத்தில் கொள்ளாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிமன்றத்திற்கு நீண்ட காலம் பிடித்துக் கொண்டது.
இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகவே இருக்கின்றது. முரண்பட்ட தீர்ப்பு வந்த நிலையில் மூன்றாவது நீதிபதி உடனடியாக இந்த வழக்கை விசாரித்து அதி விரைவில் தீர்ப்பு வழங்கவேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map