11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் கொடுமை: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2342 Views
11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் கொடுமை:
குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! 
11-year-old-studentRaped17-people-arrested_SECVPF
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை 17 பேர் சேர்ந்து கடந்த 7 மாதங்களாகக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி யுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அந்தச் சிறுமி காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளியாக இருந்த நிலையில், லிப்ட் ஆப்ரேட்டர், காவலாளி என அக்குடியிருப்பில் பணியாற்றி வருபவர்களும், அவரது நண்பர்களும் இதுபோன்ற வக்கிரமான முறையில் நடந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சிறுமி 7 மாதங்களாகப் போதை மருந்து மற்றும் மயக்க ஊசியைச் செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த இதுபோன்ற மனிதமிருகங்களை வன்மையாகத் தண்டிக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நடைபெறும் குற்றங்களில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியா என ஆய்வு முடிவுகள் வெளியான சில தினங்களிலேயே இதுபோன்ற ஈவிரக்கமற்ற செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் கடுமையான தண்டனையே இதுபோன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும். இச்சம்பங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்கத்  தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து விரைவாகச் செயல்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுதல் எது? என்ற விழிப்புணர்வு கல்வியை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply