11ஆம் ஆண்டில் மனிதநேய மக்கள் கட்சி: தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

1221 Views
11ஆம் ஆண்டில் மனிதநேய மக்கள் கட்சி:
தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
mmk1
மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர்
மாயவரம் ஜெ. அமீன் வெளியிடும் செய்தி குறிப்பு
பிப்ரவரி 07, மனிதநேய மக்கள் கட்சியின் துவக்கத் தினத்தை முன்னிட்டு   தமிழகம் முழுவதும் உள்ள மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக தொண்டர்கள் கட்சி கொடியினை ஏற்றி, வறியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர், அனைத்து மாவட்டங்கள் பெருநகரங்கள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகளில் கட்சி தெரு முனை  கூட்டங்களும் , பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைமையத்தில் கட்சியின் கொடியை தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஏற்றி வைத்து, அப்பகுதி ஏழை எளிய மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது மமக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ. அஸ்லம்பாஷா, மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜைனுலாபுதீன்,  மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல் திருச்சியில் கொடியேற்றும் மற்றும் நலத்திட்டம் உதவி நிகழ்ச்சிகள் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்று வருகின்றன.
இவண்
மாயவரம் ஜெ. அமீன்
தலைமை நிலைய செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map