+1, +2 மாணவர்கள் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தமிழக அரசு போக்குவரத்து மற்றும் உணவு வசதி செய்து தர வேண்டும்!

219 Views

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கொரோனா என்கிற கொடூர வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் நாளை (24.03.2020) மாலை முதல் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

அதேசமயம்  நாளை +2 தேர்வையும், வியாழன் அன்று +1 தேர்வையும் நடத்திய தீர்வது என்ற தமிழக அரசின் முடிவு அறிவுடமையானதாக இல்லை.

இச்சூழலில் தேர்வை நடத்தியே தீர்வது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளதால்  மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மையத்திற்கு வந்து செல்ல வாகன வசதி செய்து தர வேண்டும். விடுதியில் தங்கி தேர்வு முடித்து ஊர் திரும்பும் மாணவர்கள், அவர்களை அழைத்து வரச் செல்லும் பெற்றோர் ஆகியோர் இடையூறு இல்லாமல் வீடு திரும்ப, பள்ளிக் கல்வித் துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் இதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்திட வேண்டும்.

மேலும் தமது சொந்த ஊர்களை விட்டு சென்னை போன்ற பெருநகரங்களில் தேர்வு எழுதும் தம் பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் பெற்றோருக்கும் உணவிற்கான வசதியை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்.
அதேபோல் அந்த மாணவர்களும் தங்கள் இருப்பிடங்களில் இருந்து தேர்வு மையத்திற்குச் செல்லவும், வீடு திரும்பவும் வாகன வசதிகளை செய்து தரவேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map