வெறுப்புணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகள்: கல்யாண் ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2124 Views
வெறுப்புணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகள்:
கல்யாண் ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
22853133_1607139562676572_5539068324807528645_n
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும், அவரது மனைவி ஆயிஷா அவர்களையும்  கொச்சைப்படுத்தும் விதமாகவும், இஸ்லாம் பற்றி எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாமல் மக்களிடையே மத காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகவும்  முகநூலில் கடந்த 16ம் தேதி  பதிவு செய்துள்ள கல்யாண் ராமனை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மத நம்பிக்கைக்கும், மத உணர்வுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அதன் பொருட்டு மதக் கலவரம் உண்டாக்கிப் பல உயிர்கள் பறிக்கப்பட வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் வேண்டுமென்றே சட்டத்திற்குப் புறம்பாக வெறுப்புணர்வைத் தூண்டும் வாசகத்தை தன் முகநூலில் தொடர்ந்து கல்யாண் ராமன் பதிவிட்டு வருகிறார்.

ஏற்கெனவே இதுபோன்ற ஒரு பதிவிற்காக மனிதநேய மக்கள் கட்சி காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 9.1.2016 கல்யாண ராமனைச் சிறையில் அடைத்தது சென்னை மாநகரக் காவல்துறை. ஏற்கெனவே சிறைக்குச் சென்றுவந்த பிறகும், பொது அமைதியைக் கெடுக்கும் விதமாக முகநு£ல் போன்ற சமூக வலைதளங்களில் கல்யாண ராமன் பதிவு செய்திருப்பது சிறுபான்மை முஸ்லிம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
  எனவே, தமிழக அரசு மத நம்பிக்கைக்கும், மத உணர்வுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு போடும் கல்யாண் ராமனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply