வெனிசுலா அதிபர் சாவேஸ் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

1491 Views

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் செய்தி: தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் இன்று காலை, புற்றுநோயின் கோரத்தால் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேஸ் அவர்களின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும். சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய ஒருசில தலைவர்களில் அவர் முதன்மையானவர். இந்தியா போன்ற நாடுகளுடன் சிறப்பான உறவைப் பராமரித்தவர். உலகம் முழுக்க கம்யூனிஸ்ட் நாடுகள் பலவீனம் அடைந்திருக்கும் நிலையில் வெனிசுலாவை வலிமைமிக்க நாடாக மாற்றிக் காட்டியதில் அவருக்கு பெரும் பங்குண்டு. குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், மறக்க முடியாத உலகத் தலைவர்களின் வரலாற்றில் அவர் இடம்பெறுவது உறுதியாகும். அவரது மறைவால் வாடும் இடதுசாரி தோழர்களுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன் (எம். தமிமுன் அன்சாரி)

Leave a Reply