விவசாய சங்கங்கள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டம்:- தாம்பரத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் ரயில் மறியல்!

2242 Views
விவசாய சங்கங்கள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டம்:-
தாம்பரத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் ரயில் மறியல்!
bandh
மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளியிடும் அறிக்கை:
கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்று சம்பா சாகுபடிக்கு வழங்கிட வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியும், முல்லைப் பெரியாறு, பாலாறு உரிமைகளை மீட்டிடவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைத்திடவும், விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வரும் 30.08.2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் முழுஅடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்த உள்ளனர்.
காவிரியை நம்பி தமிழ்நாட்டில் வாழும் சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடைபெற உள்ள இந்தப் போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் பங்கேற்கப்பார்கள்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30 காலை 11 மணிக்கு தாம்பரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
எம். ஹுசைன் கனி
தலைமை நிலைய செயலாளர்
Leave a Reply