விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்த காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டி க்க வேண்டும்!

1260 Views
விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்த காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டி க்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.

விழுப்புரம் மாவட்டம், கிருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் வீடு புகுந்து 10ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள காட்டுமிராண்டிதனத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன்.

இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய அதிமுக நிர்வாகியும், அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் முருகன் மற்றும் கலிய பெருமாள் ஆகியோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

ஜெயஸ்ரீயின் தந்தை நடத்திவரும் கடையை ஊரடங்கு நாட்களில் அரசு அனுமதிக்காத நேரத்தில் முருகன் திறக்க கூறி பொருட்களை கேட்டதால் அதனை மறுத்த சிறுமி ஜெயஸ்ரீயை அடித்துள்ளனர். இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அதற்கு பழிவாங்கும் விதமாக மாணவியை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

குடிபோதையில் நடந்தேறிய இந்த சம்பவத்திற்கு அரசின் டாஸ்மாக் திறப்பே காரணம். ஊரடங்கு உத்தரவால் 70 விழுக்காடு குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில் டாஸ்மாக் திறப்பிற்கு பிறகு இதுபோன்ற குற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது அரசியல் பின்புலம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்
7 வட மரைக்காயர் தெரு
சென்னை 600 001

Leave a Reply