ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் ஒருவர் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!

1058 Views
ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் ஒருவர் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!
alwar
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தராஜே சிந்தியா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆல்வார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடுகளுடன் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தை வழிமறித்த சங்பரிவார் குண்டர்கள் அதிலிருந்த ஐந்து முஸ்லிம்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தக் கொலைவெறித் தாக்குதலில் பெஹ்லு கான் (வயது 55) என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பால் பண்ணை நடத்தி வரும் விவசாயியாக பெஹ்லு கான் குழுவினர் சந்தையிலிருந்து இரண்டு கறவை பசு மாடுகளை வாங்கி உரிய உரிமத்துடன் கொண்டு சென்ற போது அவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பசு பாதுகாப்பு படையினர் என்ற போர்வையில் சங்பரிவார் கும்பல் நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை நடத்தி வருகிறது.
கடந்த வருடம் (2016) ஜார்கண்ட் மாநிலத்தில் லடேஹர் மாவட்டத்தில் உள்ள பளுமத் காட்டுப் பகுதியில் மாடு வியாபாரம் செய்துவந்த 13 வயது சிறுவன் உட்பட இரண்டு ஏழை முஸ்லிம்களை பாசிச வெறிபிடித்த மனித மிருகங்கள் கொடூரமாகத் தாக்கி மரத்தில் தூக்கிலிட்டு படுகொலை செய்தனர்.
இதேபோல் 2015ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் அக்லாக் என்ற முதியவர் மற்றும் அவரது மகன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் முதியவர் அக்லாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி காவல்துறை முன்னிலையில் முஸ்லிம் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத்தில் உனா என்ற பகுதியில், இறந்துபோன மாட்டின் தோலை உரித்தார்கள் என்று கூறி காவல்துறை முன்னிலையில் தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
ராஜஸ்தான் மாநில சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா ஆகியோர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் மனித உரிமை, மனித நேயம் என்ற உயரிய மாண்புகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்க்கொண்டுள்ளது. மனிதகுல விரோதிகளுக்கு பசு பாதுகாப்பு படை என்ற பெயரில் நாட்டு மக்களைக் கொலை செய்வதற்கு மத்திய பாஜக அரசு மறைமுகமாக அனுமதி அளித்து வருகிறது.
மத்திய பாஜக அரசும், ராஜஸ்தான் மாநில பாஜக அரசும் ஆல்வார் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கடுமையான மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map