ரம்ஜான் தினத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகள்: ஒத்திவைக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

2358 Views
ரம்ஜான் தினத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகள்:
ஒத்திவைக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
UNIVERSITY
ரம்ஜான் தினத்தன்று நடத்தப்படவுள்ள சென்னை பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
முஸ்லிம்களின் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை வரும் ஜூன் 16  அன்று கொண்டாடப்பட உள்ளது. இத்தினத்தில் சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் பி.ஏ.(வரலாறு) முதலாம் ஆண்டு பயின்றுவரும் மாணவ/மாணவியர்களுக்கான “The 20th Century” எனப்படும் பாடத் தேர்வு நடைபெற உள்ளதாகத் தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரம்ஜான் தினத்தன்று தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இப்புனித நாளில் முஸ்லிம் மாணவ, மாணவிகள் தங்களின் இறைக் கடமைகளை நிறைவேற்றியவாறு இருப்பர். இந்த வேளையில் தேர்வில் பங்கேற்பது என்பது மிகவும் சிரமம் ஆகும்.
எனவே, 16.6.2018 மற்றும் 17.6.2018 தேதிகளில் நடைபெறவுள்ள தேர்வை வேறு ஒரு தேதிக்கு மாற்றம் செய்து ஒத்திவைக்க ஆவன செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
 மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply