ரமலான் நோன்பு நாட்களில் உணவகங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும்’ பேரா.ஜவாஹிருல்லா கோரிக்கை

1096 Views

ரமலான் நோன்பு நாட்களில் உணவகங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கக் கோருதல் தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்களுக்கு பேராசியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் எழுதிய கடிதம்

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் உட்பட நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் புனித ரமலான் மாதம் ஆரம்பிக்க உள்ளது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் சூரியன் உதிப்பிற்கு முன்பிருந்தும், சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும் இருந்து தங்களது இறை கடமையை நிறைவேற்றுவார்கள்.

இந்த புனித மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மார்ச் 24 வரை பல்வேறு பணிக்காக சென்னை வந்தவர்கள், ஏற்கனவே சென்னையில் தங்கி பணியாற்றும் வெளியூரைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்க பெரும் சிரமத்திற்குள்ளாவார்கள்.

ஊரடங்கு உத்தரவால் இரவு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் வெளியூர்களைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்களுக்கு ஸஹர் என்னும் அதிகாலை உணவும், இஃப்தார் என்னும் மாலை உணவும் கிடைப்பது எட்டாக்கனியாகிவிடும்.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் புனித ரமலான் மாதத்தில் உணவகங்கள் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திறந்து பொட்டலம் உணவுகளை வழங்க அனுமதி அளிக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன். . இந்த நேரங்களில் உணவு வாங்கத் தனி நபர்களாகச் செல்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Leave a Reply