மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த நாள்: கருப்புச் சட்டை அணிந்து கண்டனம்!

1861 Views

மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த நாள்:
கருப்புச் சட்டை அணிந்து கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கடந்த ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நாசகர ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஸ்நோலின் உட்பட 15 பேர் அநியாயமாக காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். உயிர்நீத்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தவும் கடுமையான முறையில் தடுப்பதற்கு காவல்துறை முயன்று வருகின்றது.

தமிழக வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான இந்த அராஜகத்திற்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனம் தனது ஆலையை மீண்டும் திறக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்த சூழலில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்தும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மே 22 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கருப்புச் சட்டை அணிந்து கண்டனம் தெரிவிக்கப்படும்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply