மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

2201 Views
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
tiru
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை இன்று பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அதிகாலையில் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதற்காக பழைய போராட்ட வழக்குகளைக் காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மனித உரிமைக் காப்பாளர்கள் குறித்த ஐ.நா.வின் நெறிமுறைகளை மீறி மோடி அரசும் எடப்பாடி அரசும் இந்தக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஐ.நா.வின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலாகும்.
உடனடியாக திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply