மே தின வாழ்த்துச் செய்தி!

1626 Views
மே தின வாழ்த்துச் செய்தி!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும்
வாழ்த்துச் செய்தி:
உலகமெங்கும் இருக்கின்ற உழைக்கும் மக்களின் உரிமை திருநாளாக விளங்குகின்ற “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தனது உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு அந்த உழைப்பின் மூலம் இந்தச் சமூகத்திற்கு பொருளாதார வளர்ச்சி தரும் உழைப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்ற அடிப்படை உரிமைகள் கிடைத்திட இந்நாள் பேருதவியாக இருக்கட்டும்.
நம் நாட்டை பொறுத்தளவில் உழைப்பவர்களின் உழைப்பு பெரு முதலாளிகளால் சுரண்டப்பட்டு வருகிறது, உழைப்பாளர்கள் தங்களின் உழைப்பிற்கான ஊதியங்களைப் பெற பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது. போராடிப் பெற்ற உழைப்பாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும் அவல நிலை நிலவுகிறது.
இதுபோன்ற நிலைகளை மாற்றி உழைப்பாளர்களின் நியாயமான உரிமைகள் கிடைக்க உழைப்பாளர்கள் ஓரணியில் நின்று வெற்றி காண உறுதியேற்க வேண்டும்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply