மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்: திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

2261 Views
மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்:
திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!
jawahirullah
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள்.
ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தமிழகச் சட்டமன்றத்தில் பணியாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply