மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடனே அரசு குடியிருப்பை ஒதுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1656 Views
மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடனே அரசு குடியிருப்பை ஒதுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
வீட்டுவசதி அதிகாரிகளின் ஆணையின் படி அவர் அந்த வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒரு வீட்டிற்குக் குடியமர்ந்துள்ளார்.
அப்பழுக்கற்ற 94 வயதை அடைந்து மூத்த அரசியல் தலைவரை, அவர் வசிக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய திட்டம் வருகிற காரணத்தால் வேறு குடியிருப்பை ஒதுக்காமல் மற்றவர்களை வெளியேற்றியது போன்று வெளியேற்றியது கண்டத்திற்குரியது.
94 வயதிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழனாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், வாழ்வில் எளிமை, பொது வாழ்வில் நேர்மை என வாழ்கிற ஐயா நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு குடியிருப்பை ஒதுக்கித் தர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
Leave a Reply