முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு!

2089 Views
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு!
Madras-HC-1
மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் 
மாயவரம் ஜெ. அமீன் வெளியிடும் செய்திக் குறிப்பு:
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை மத்திய அரசு அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பிறகு அது அரசமைப்புச் சட்ட திருத்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னேறிய வகுப்பாரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு  முரணானது என்பதையும் பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டி இந்த இடஒதுக்கீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். சுப்பைய்யா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் என்.ஏ.நிசார் அஹ்மது இவ்வழக்கில் ஆஜரானார்.  ஏற்கெனவே 10 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுடன் இணைத்து இவ்வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இப்படிக்கு,
(மாயவரம் ஜெ. அமீன்)
தலைமை நிலைய செயலாளர்
Leave a Reply