முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பரிபூரண உடல் நலன் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்!

2290 Views
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பரிபூரண உடல் நலன் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்!
25552056_1950308651651880_6920024811975477530_n
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்தமிழ் அறிஞர்  கலைஞர் அவர்களின் உடல்நிலை அவரது வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி மனவருத்தத்தை அளிக்கிறது.

1969ல் இருந்து திமுக என்னும் கட்சியை வழிநடத்தி வரும் கலைஞர் அவர்கள், சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வத்தால் தமிழ்நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக செயல்பட்டு வந்தார்.

60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார் கலைஞர்.

தலைவர் கலைஞர் முழுமையான உடல்நலம் பெற்று மீண்டும் அவர் மூலம் திராவிட சூரியன் மென்மேலும் தனது பிரகாசத்தை வெளிப்படுத்த இறைவன் கிருபை செய்வானாக என பிரார்த்திக்கின்றேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply