மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு விரைவில் நடத்தப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1675 Views
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தமிழக முதல்வர் தலைமையில் விரைவில் நடத்தப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
abdul-samad
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஆண்டுதோறும் மாநில முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பா ளர் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளதால் அரசின் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவை பற்றிய ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
இதுபோன்ற மாநாடுகளில் மாவட்ட ஆட்சியர்கள் தத்தமது மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், காவல் கண்காணிப்பாளர்கள் சட்டம் ஒழுங்கு குறித்தும் விளக்குவார்கள். அதேபோன்று தங்களது மாவட்டங்களுக்குத் தேவையான  திட்டங்களையும் முதலமைச்சரிடம் நேரில் தெரிவிப்பார்கள். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது கவலை அளிக்கிறது.
வர்தா புயல், விவசாயிகள் தற்கொலை போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவரும் தற்போதைய சூழலில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாநாடு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தி உரிய அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
 அன்புடன்
ப.அப்துல் சமது
பொது செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply