இராமநாதபுரம் டிச28. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை துவக்கி வைத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் பொருட்டு ஐந்து லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 28.12.2015 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்கை கால், மூன்று சக்கர சைக்கிள், தள்ளுவண்டி (வீல்சேர்), ஊன்றுகோல் (காலிப்பர்), மூன்று சக்கர மோட்டார் பைக் போன்ற உதவிப் பொருட்கள் இந்த நிதியிலிருந்து வழங்கப்படும்.
இந்த உதவி திட்டங்களின் துவக்கமாக இன்று காலை 11.30 மணியளவில் உத்திரகோசமங்கை அருகில் உள்ள கீழச்சீத்தையை சேர்ந்த இருகால்களும் செயல்பட முடியாத பட்டதாரி இளைஞரான ஆறுமுகம் என்பருக்கும் கீழக்கரையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இருகால்களும் செயல்பட முடியாத யூசுப் சாஹிப் என்பவருக்கும் மூன்று சக்கர மோட்டார் பைக் கை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறகாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் கனகராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அன்வர் அலி, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் பாக்கா அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா