மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே. பாலகிருஷ்ணன் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!

1787 Views
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர்
கே. பாலகிருஷ்ணன் தேர்வு!  மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!
K-balakrishnan
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே. பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தலைவர் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் சிறப்புடன் பணியாற்றியவர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட பலதரப்பு மக்கள் பிரச்சினைகளுக்கு சளைக்காமல் குரல் கொடுத்து வருபவர் கே. பாலகிருஷ்ணன்.
நான் கடந்த 2011 முதல் 2016 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சக சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாக மக்கள் பணியாற்றிய பாலகிருஷ்ணன், சட்டமன்றப் பேரவையில் அடித்தட்டு மக்களுக்கான கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் அனைத்திலும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தவர் என்பது அவருடைய தனிச்சிறப்பு.
கே. பாலகிருஷ்ணன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிபெற மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply