மனிதநேய மக்கள் கட்சி தலைமை பொதுக்குழு தீர்மானங்கள்

2809 Views
மனிதநேய மக்கள் கட்சி தலைமை பொதுக்குழு தீர்மானங்கள்
15232075_1326876130687504_6335600392771023640_n15193625_366692757003376_224531766774716590_n15178231_1326876510687466_421977680087930164_n15232190_1984370448456513_6917538790540772937_n15284979_553885078144061_2075375396798870127_n15319079_570141013185223_178841945691378541_n15319238_570141106518547_5583539464288993722_n15285042_1984370291789862_5146103767917889346_n
நவம்பர் 30, 2016 அன்று திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1. காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகளை பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
2. சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளதை பொதுக்குழு கண்டிக்கிறது.
3. கூடங்குளத்தில் புதிதாக அணுஉலைகளைத் திறக்கக் கூடாது என்றும் பழுதான உதிரி பாகங்களால் நிறுவப்பட்டுள்ள முதல் இரண்டு அலகுகளையும் மூட வேண்டுமென பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
4. ஏழை, எளிய மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு எதிராகவும், சமூகநீதிக் கொள்கைக்கு முரணாகவும், அரசியல் சாசன அடிப்படைகளை மீறும் வகையிலும் உள்ள புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அடியோடு கைவிட வேண்டும் என பொதுக்குழு வலியுறுத்துகிறது.
5. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் விஷயத்தில் பெரு முதலாளிகளை விட்டுவிட்டு பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் மத்திய மூர்க்க நடவடிக்கைகளை பொதுக்குழு கண்டிக்கிறது.
6. மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழகத்தின் மீது திணிக்கக் கூடாது என்று பொதுக்குழு வலியுறுத்துகிறது.
7. உலகில் பலநாடுகளிலும் வெற்றிகரமாக இயங்கிவரும் விகிதாச்சாரத் தேர்தல் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்குழு வலியுறுத்துகிறது.
8. பெரு முதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததுபோல் ஒட்டுமொத்த விவசாயிகளின் கடனையும், கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
9. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதைத் தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுக்குழு வலியுறுத்துகிறது.
10. கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு பொதுக்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது. 
 அன்புடன்
ப. அப்துல் சமது
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply