மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிப்ரவரி 7ல் சென்னை, மதுரை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்

1849 Views
முஸ்லிம் சிறைவாசிகள், உட்பட அனைத்து வாழ்நாள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிப்ரவரி 7ல் சென்னை, மதுரை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்!
cropped-logo-1-1.jpg
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் அபுதாஹிர் உள்ளிட்ட முஸ்லிம் சிறைவாசிகளையும் மற்றும் பேரறிவாளன்,  உள்ளிட்ட தமிழக சிறையில் உள்ள அனைத்து வாழ்நாள் தண்டனைக் கைதிகளையும் தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161ஐ பயன்படுத்தி விடுதலை செய்யக் கோரி வரும் பிப்ரவரி 7 அன்று மாலை 3 மணியளவில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறவுள்ளது.
சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை, கோவையில் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மதுரையில் பழங்காநத்தம் ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் எனது தலைமையில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், திரு.விடுதலை ராஜேந்திரன், திரு.தியாகு, பேரா.மார்க்ஸ், ஊகடவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, திரு.திருமுருகன், திரு.செந்தில் ஆகியோரும், கோவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரு.கு.இராமகிருஷ்ணன், திரு.பா.ப.மோகன், திரு.கன.குறிஞ்சி ஆகியோரும், மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் செ.ஹைதர் அலி தலைமையில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரு.கொளத்து£ர் மணி, திரு.சுப.உதயகுமார், திரு.ஹென்றி டிபேன், திரு.கதிர் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதஉரிமை ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

 

 அன்புடன்
ஒப்பம் (எம்.எச்.ஜவாஹிருல்லா)
Leave a Reply