மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம்

2623 Views
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
srilanka
1.  20 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்
தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அயராது பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட ஆம்பூர் தொகுதியை ம.ம.க.விற்கு ஒதுக்குமாறு திமுக தலைமையை கேட்டுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
2.  இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு
இலங்கை நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் மைதிரிபாலா சிறீசேனா தன்னிச்சையாக கலைத்ததை இந்நிர்வாகக் குழு ஒரு ஜனநாயகப் படுகொலையாகக் கருதுகிறது. தமிழர்களை இனப்பேரிழிவு செய்த மகிந்த ராஜபக்சே நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகும் பிரதமராகத் தொடர்வார் என்ற அறிவிப்பும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அண்டை நாடான இலங்கையில் நடைபெற்று வரும் இந்த ஜனநாயகப் படுகொலைகள் குறித்து இந்திய அரசு மவுனம் சாதித்து வருவது பல்வேறு சந்தேங்களை எழுப்புகிறது. இலங்கையில் ஜனநாயக மாண்புகள் காப்பாற்றப்பட்டு தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உரிமைகள் காக்கப்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது.
இவண்,
ப. அப்துல் சமது
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply