மனிதநேய மக்கள் கட்சியின் குடியரசு தின வாழ்த்து

2361 Views

மனிதநேய மக்கள் கட்சியின்  குடியரசு தின வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி:

republic-day-india-2015
இந்தியத் திருநாடு தனது 67வது குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த இனிய நாளில், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அனைத்து மேதைகளுக்கும் நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள், மொழிகள், கலாச்சாரங்கள் ஆகிய வேறுபாடுகளையும் கொண்ட இந்தியத் திருநாட்டில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாடு தான் அனைவரையும் இணைக்கிறது.
1950ஆண்டிலிருந்து இந்திய மக்களுக்கு அரசியல் சமத்துவம் வழங்கப்பட்டு விட்டது. அது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் பொருளாதார சமத்துவம், சமூக சமத்துவம் ஆகிய இரண்டும் இன்றுவரை மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
ஜனநாயகத் தத்துவங்களை உறுதிப்படுத்தவும், நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியைக் சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் அனைவரும் ஓரே அணியில் திரளவேண்டும்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்

(எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்)

Leave a Reply