மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

1453 Views
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
somnath
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:

மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மரணச் செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

கடந்த 1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முதல் கட்டத்தில் மக்களவைத் தலைவராக 2004 முதல் 2009 வரை பொறுப்பு வகித்தார்.
இந்தியாவின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்ற சோம்நாத் சாட்டர்ஜி, 1996ஆம் ஆண்டு ‘சிறந்த நாடாளுமன்றவாதி’ என்ற விருதைப் பெற்றுள்ளார்.

ஏழை, எளியவர்களுக்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த சிறந்த நாடாளுமன்றவாதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இடதுசாரி தோழர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map