ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

2030 Views
காங் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

காங்கிரஸ் மூத்த தலைவர்
ப.சிதம்பரம் கைது!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து முதன் முதலாகக் காவி பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதற்குப் பழிவாங்கும் நடவடிக்கை இது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

மத்திய பாஜக அரசின் பலதரப்பட்ட தவறுகளை அறிவார்ந்த வகையில் அம்பலப்படுத்திய ப. சிதம்பரம் அவர்களின் கருத்துக்கு கருத்தியல் ரீதியாகப் பதில் கூற திராணியற்ற மோடி அரசின் கோழைத்தனமான செயலே அறிவார்ந்த தமிழர் ப. சிதம்பரத்தின் கைது.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply