பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

3260 Views

பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்:
மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

2பொள்ளாச்சியில் மிக மோசமான முறையில் இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு, பிறகு துன்புறுத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். எனவே பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று (15.03.2019) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1

மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், தலைமைக்கழகப் பேச்சாளர்கள் தாங்கல் அப்துல் காதர் , குணங்குடி மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

சென்னை மாவட்டத் தலைவர்கள் ஏ.அலி, அப்துல் சலாம், முகம்மது அபூபக்கர்(கோரி), மாவட்டச் செயலாளர்கள் நசுருதீன், ரியாசுதீன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்கள் இ.எம்.ரசூல், தாஹா நவீன், தென்சென்னை மாவட்ட செயலாளர்கள் அஹமது அலி ஜின்னா, நெய்னா முகம்மது மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

Leave a Reply