பொது சிவில் சட்டம்: முஸ்லிம்களின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி கவிஞர் கனிமொழி மற்றும் முத்தரசனுடன் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

2237 Views
பொது சிவில் சட்டம்: முஸ்லிம்களின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி கவிஞர் கனிமொழி மற்றும் முத்தரசனுடன் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு
with-gani-mozhi-dmk-2with-gani-mozhi-dmk-3
faizimutharasan-2
mutharasan-1
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய பாஜக தலைமையிலான அரசின் திட்டம் குறித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக முடிவுச் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்று அக்டோபர் 19 அன்று  திமுக வின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் அதன் மகளிர் அணிச் செயலாளாருமான கவிஞர் கனிமொழியை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்தனர் இச்சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா. எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் மவ்லவி கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, தமிழ்ஜநாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சென்னை மாவட்டத் தலைவர் மவ்லவி தர்வேஸ் ரஷாதி, வெல்பேர் பார்டி ஆப் இந்தியாவின் தலைவர் எஸ். என். சிக்கந்தர் மற்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா ஆகியோர் பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர மத்திய பாஜக ஆட்சியின் முயற்சி குறித்து எடுத்துரைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுபூர்வமான இப்பிரச்னையில் ஒத்துழைப்பு தருமாறு கோரும் கடிதத்தை அளித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் திரு. இரா. முத்தரசனையும் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பொது சிவில் சட்டத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை கோரினர். பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் சமீம் பைஸியை சந்தித்து பொதுசிவில் சட்டம் குறித்த முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆதரவு கோரினர்.
படங்கள்: தாஹா
Leave a Reply