பொது சிவில் சட்டம்: முஸ்லிம்களின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு

2801 Views
பொது சிவில் சட்டம்: முஸ்லிம்களின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி அரசியல் கட்சி தலைவர்களுடன் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

comnpera1pera2congperayapress-mhjvasanvasan1vcvc1vellmurugan
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய பாஜக தலைமையிலான அரசின் திட்டம் குறித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக முடிவுச் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் இன்று அக்டோபர் 20 அன்று

கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்தனர் இச்சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா. எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் மவ்லவி கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, தமிழ்ஜநாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சென்னை மாவட்டத் தலைவர் மவ்லவி தர்வேஸ் ரஷாதி, வெல்பேர் பார்டி ஆப் இந்தியாவின் தலைவர் எஸ். என். சிக்கந்தர் மற்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா ஆகியோர்,

திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள்

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

திரு. ஜி.கே. வாசன் அவர்கள்
தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள்
மாநிலச் செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திரு. தொல். திருமாவளவன் அவர்கள்
தலைவர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

பாஸ்டர் கே.பி. எடிசன் அவர்கள்
பொருளாளர்
பெந்தகோஸ்தே திருச்சபைகள்

சகோ. இனிகோ இருதயராஜ் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்
கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கம்

பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் அவர்கள்
தென்னிந்திய திருச்சபை

பேராயர் எஸ்றா. சற்குணம் அவர்கள்
தலைமை பேராயர்
இந்திய சுவிஷேச திருச்சபை

திரு. வேல்முருகன்
தலைவர் தமிழர் வாழ்வுரிமை கட்சி

ஆகியோரை சந்தித்து பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கும் மத்திய பாஜக ஆட்சியின் முயற்சி குறித்து எடுத்துரைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுபூர்வமான இப்பிரச்னையில் ஒத்துழைப்பு தருமாறு கோரும் கடிதத்தை அளித்தனர். மேலும் பொதுசிவில் சட்டம் குறித்த முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆதரவு கோரினர்.

படங்கள்: தாஹா
Leave a Reply