போபால் படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

1526 Views

போபால் படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

3

4

2

1

5

14947842_602347679951326_7555273369940406704_n

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உயர் பாதுகாப்பு மிக்க போபால் மத்திய சிறையில் இருந்து சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேர் ஞாயிறு நள்ளிரவில், 32 அடி சுவரில் ஏறிக் குதித்து தப்பியதாக முதலில் அறிவித்த மத்தியப் பிரதேச போலீசார், அடுத்த சில மணி நேரத்தில், அந்த எட்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தனர். கொலை செய்யப்பட்ட 8 பேர் சம்பந்தமான வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போலீசாரால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தப் படுகொலைகள் நடந்தேறியுள்ளன. ம.பி. உள்துறை அமைச்சர், கொலை செய்யப்பட்டவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். இதேபோல் அச்சாராபுரா கிராமத்தைச் சேர்ந்த பப்பு மீனா என்ற விவசாயியும் கொல்லப்பட்டவர் களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். எனவே, இக்கொலைகள் நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனவே, மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறலைக் கண்டித்தும், இதற்கு உறுதுணையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்தும் தமுமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மமக துணைப் பொது செயலாளர் கோவை செய்யது, தமுமுக மாநிலச் செயலாளர்கள் எஸ். மைதீன் சேட்கான், ஜெ. ஹாஜாகனி, மனிதஉரிமை ஆர்வலர் பேரா.மார்க்ஸ், பச்சை தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமார், கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோரும் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

மமக வழக்கறிஞர் அணி செயலாளர் எம். ஜைனுல் ஆபிதீன், இளைஞர் அணி செயலாளர் சேக் முஹம்மது அலி, மாவட்ட நிர்வாகிகள் எப். உஸ்மான் அலி, எல். தாஹா நவீன், முகம்மது அனிபா, எச். முகம்மது தமீம், இ.எம்.ரசூல், அகமது அலி ஜின்னா, அப்துல் ரவூப், சலீம் கான், சலீம் பாஷா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள், பகுதி, கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map