பேருந்து கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்; பேரா.ஜவாஹிருல்லா உட்பட மனிதநேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கைது!

2625 Views
பேருந்து கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்; பேரா.ஜவாஹிருல்லா உட்பட மனிதநேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கைது!
mhj3
mhj2
pas1

மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளிடும் பத்திரிக்கை செய்தி:

பேருந்துக் கட்டணத்தை கண்மூடித்தனமாக உயர்த்திய அதிமுக அரசைக் கண்டித்தும், ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வை உடனே முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் திமுக உட்படத் தோழமை கட்சியினருடன் மனிதநேய மக்கள் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு, உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பி கைதாயினர்.

சென்னை எழும்பூர் பகுதி, சூளை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர், எல்.தாஹா நவீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கைதாகியுள்ளார்.

அதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளா ப.அப்துல் சமது, தென்சென்னை மாவட்டச் செயலாளர் அஹமது அலி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.
Leave a Reply