பேரிடர் நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டுபத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!

554 Views

பேரிடர் நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டுபத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, விடுபட்ட பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்குமென பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத் தேர்வுகளை அறிவித்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழுப்பத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராவதும், போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் தேர்வு மையங்களுக்கு வருவது இயலாத காரியம்.

கொரோனா தொற்று பரவலில் இருக்கும் இச்சமயத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தேர்வு எழுத எப்படி அனுமதிப்பர்?

ஒரு பேரிடர் நேரத்தில் பிள்ளைகளுக்கு தேர்வை நடத்துவது குழந்தைகளின் உளவியலுக்கு எதிரான செயலாகும். இது மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உண்டாக்கும்.

எனவே, ஜூன் 1 ஆம் தேதி தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமெனவும், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்து அடுத்தடுத்த கல்வி ஆண்டில் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னைன 600 001
13 05 2020

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map