பேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

1258 Views
பேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
Nannan_1_10024
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தாய்மொழியாம் தமிழுக்கு அளப்பரியத் தொண்டுகளை ஆற்றியுள்ள பெருமகனார், பேராசிரியர் மா.நன்னன் இன்று மறைந்தார் என்ற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.
பள்ளி ஆசிரியர் நிலையிலிருந்து கல்லூரி பேராசிரியர், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் எனப் பல்வேறு உயர்பொறுப்புகளை வகித்த பேரா.மா.நன்னன், தமிழைப் பிழையின்றி பேசவும், எழுதவும் உதவும் வகையில் பெருந்தொண்டு ஆற்றியவர்.
தந்தைப் பெரியார் மீது பேரன்பும், பெரும்பற்றும் கொண்ட மா.நன்னன், தமிழ்மொழியை சமயசார்பற்ற வகையில், வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் சென்ற பேரறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலாக அவர் நடத்திய தமிழ் வகுப்பு அடித்தட்டு மக்களின் இல்லங்களையும், உள்ளங்களையும் தேடிச் சென்று தெளிவு தந்தது.
1990-2010 காலகட்டத்தில் 70க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியவர். தமிழின் உரிமைக்காகப் போராட்டக் களங்கள் பல கண்ட போராளியாகவும் திகழ்ந்தவர் மா.நன்னன் அவர்கள்.
தமிழ்மொழிக்கு அருமையான தொண்டுகளை ஆற்றிய பேரா.மா.நன்னன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அன்பர்களுக்கும் ஆறுதலையும் மனிதநேய மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply