பேரா. ஜெயராமன் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

122 Views
பேரா. ஜெயராமன் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
JAYARAMAN
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உட்பட நான்கு பேரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது.
இன்று கதிராமங்கத்தில் முன்னறிவிப்பில்லாமல் ளிழிநிசி நிறுவனத்தினர் பெட்ரோல் கிணறு பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்க வந்த மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், எந்தவித அறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தார் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயத்திற்கும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் இதுபோன்ற நாசகார திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மக்களின் குரல் வலையை மத்திய&மாநில அரசுகள் தொடர்ந்து நெறித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map