பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

124 Views

தமிழக ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்குக் குட்டு

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம்விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது.

நீண்டகாலமாகச் சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலைசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பியபிறகு ஆளுநர் அதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதன் பிறகுஇதற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி வைத்தார். இன்று பேரறிவாளனை விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டு ஆளுநரின்இந்த காலதாமதச் செயல் தவறானது என்று குட்டு வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் பணி என்பதை இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள ஆறு தமிழர்களும் விடுதலை ஆவதற்கான ஒருவழிவகை இத்தீர்ப்பின் விளைவாகப் பிறந்துள்ளது.

மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்ற கூறிய நீதிமன்றம், தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் செயல் என தெரிவித்ததன் வாயிலாக தமிழ்நாட்டு ஆளுநர் தொடர்ந்து தனது அதிகாரத்தை மீறி வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் 20 ஆண்டுக்காலம் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்குமாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்பதையும் இன்றைய தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏழு தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக உடனடியாக தீர்மானத்தை நிறைவேற்றிச்சிறப்பான வழக்கறிஞர்களை உச்சநீதிமன்றத்தில் நியமித்து இந்த வழக்கில் வெற்றிபெற்றுள்ள தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைதெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிவாளனின் விடுதலை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. பேரறிவாளனின் தாய் நடத்திய அறப்போராட்டத்தின் வெற்றி என்றும் சொல்லலாம். 30 ஆண்டுகாலம் அயராத சட்ட போராட்டத்தை நடத்தி மகனை மீட்ட தியாகப் போராளி யாக அற்புதம் அம்மாள் செயல்பட்டிருக்கிறார்.

தனி ஒரு பெண்ணாக நீதி கேட்டுப் போராடி அதில் வெற்றி கண்டுள்ளஅற்புதம்மாளுக்கும் 31ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையைச் சுவாசிக்கும்பேரறிவாளனுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தீர்ப்பிலிருந்து படிப்பினை பெற்று தமிழ்நாட்டு ஆளுநர் தமிழ்நாட்டுஅமைச்சரவையின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply