பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலையைக் குடியரசு தலைவர் மூலம் நிராகரித்துள்ள மத்திய அரசு ! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

2569 Views
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலையைக் குடியரசு தலைவர் மூலம் நிராகரித்துள்ளது மத்திய அரசு !
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
perari
 
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், நளினி, சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடியாது எனக் குடியரசு தலைவர் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
 மூவர் தூக்கு தண்டனையை ரத்துசெய்யத் தமிழக சட்டமன்றத்தில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதன்பிறகு ஆயுள் தண்டனை வாசிகளாக இருக்கும் ஏழு தமிழர்களை முன்கூடியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2014 ஆண்டே அவர்களை விடுதலை செய்வதற்காக மத்திய அரசிற்குக் கடிதம் எழுதியிருந்தது.
தமிழக அரசின் கடிதத்தை கருணையுடன் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டிய மத்திய அரசு, அக்கடிதத்தை இதுநாள்வரை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது குடியரசுத் தலைவர் மூலம் இந்தப் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை நிராகரித்துள்ளது வேதனைக்குரியது.
இந்தச் சிறைவாசிகள் விடுதலையில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட முடிவுகளையே குடியரசு தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவரின் இந்த முடிவு முற்றிலும் மத்திய பாஜக அரசின் முடிவாகவே உள்ளது.
அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசு ஏழு தமிழர்கள் விடுதலையிலும் அதனைத் தொடர்ந்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசிற்கு தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் நலனின் துளியும் அக்கறையில்லை என்பதைக் குடியரசு தலைவரின் இந்த அறிவிப்பு மீண்டும் நிரூபித்துள்ளது.
எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆம் பிரிவு மாநில அரசிற்கு முழுமையான அதிகாரம் அளித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் தமிழக அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் உள்ள அனைத்து வாழ்நாள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய உடனடியாக ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply