பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1734 Views

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யத் தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதன்பிறகு வாழ்நாள் சிறைவாசிகளாக இருக்கும் ஏழு தமிழர்களை முன்கூடியே விடுதலை செய்ய நடவடிக்கை கடந்த 2014ஆம் ஆண்டே அவர்களை விடுதலை செய்வதற்காக மத்திய அரசிற்குக் கடிதம் எழுதியிருந்தது.

தமிழக அரசின் கடிதத்தைக் கருணையுடன் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டிய மத்திய அரசு, அதனைக் குடியரசுத் தலைவர் மூலம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை நிராகரித்தது.

இந்நிலையில் எழுவர் விடுதலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசியல் சாசன சட்டம் 161-ஆவது பிரிவின் அடிப்படையில் ஏழு பேர் விடுதலை தொடர்பாகத் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பின் அதனடிப்படையில் 2018 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவெடுத்து, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரையை அனுப்பி வைத்தது. ஆனால், தமிழக ஆளுநர் ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை, இந்நிலையில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தப் பிரச்சினை தமிழக ஆளுநரிடம் இருப்பதால், அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு தள்ளுபடி செய்துள்ளது.

எனவே, தற்போது மாநில ஆளுநர் மூலம் ஏழு பேரை விடுதலை செய்ய மாநில அரசிற்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply