பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!

2431 Views
பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத உயர்வு:
மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!
petrol
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை:
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.80க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.72க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால்  பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நாட்டு மக்கள் தற்போது தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையேற்றதால் மேலும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விலை நிர்ணயம் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் பகல்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை அளிக்கும் இந்த பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனே குறைத்து பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், தினந்தோறும் விலை நிர்ணயம் என்ற முறையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் வரியை ஜி.எஸ்.டியின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply