பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்!

1567 Views

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்:

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

MHJ-2

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.35 காசுகளும், காஸ் சிலிண்டருக்கு ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு 1.6.2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசின் இந்த விலை உயர்வை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யாமல், மனம்போன போக்கிற்கு விலையை அதிகரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே மத்திய அரசு விலை உயர்வை திரும்பப் பெறுவதுடன், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள விலை நிர்ணய உரிமையையும் திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கின்றது.

அன்புடன்
(எம்.எச்.ஜவாஹிருல்லா)
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply