புல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1139 Views
புல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
mhj new
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை வீரர் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் உள்ளிட்ட 40திற்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து அவர்களைச் சட்டத்தின் மூலம் தண்டனை பெறச் செய்ய மத்திய மற்றும் காஷ்மீர் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map