புனித ஹஜ் யாத்திரைக்கு ரூ.6 கோடி மானியம்! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

1756 Views
புனித ஹஜ் யாத்திரைக்கு  ரூ.6 கோடி மானியம்!
மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!
subsidies-for-Hajj-pilgrimage_MEDVPF
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சவூதி அரேபியா சென்று வருகின்றனர். இந்த ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் இந்திய முஸ்லிம்களுக்கு ஏர்இந்தியா விமானப் பயணத்தில் மானியம் அளித்து வந்த மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதத்தில் ரத்து செய்தது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் இருந்து 2018-2019 ஆண்டு ஹஜ் யாத்திரைக்கும் செல்லும் சுமார் 3728 நபர்களுக்கு ரூ.6 கோடி மானியத்தை அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது.
தமிழகத்திலிருந்து மானசரோவர் மற்றும் முக்திநாத் செல்லும் இந்துக்களுக்கு  வழங்கப்படும் மானியத்தைப் போலவும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம் செல்ல வழங்கப்படும் மானியத்தைப் போலவும், முஸ்லிம்களுக்கு  ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.
இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவிலேயே ஹஜ் செல்வதற்காக மானியம் வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply