புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்-: முதல்வர் நாராயணசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

2416 Views

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்–:

முதல்வர் நாராயணசாமிக்கு  மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

v-narayanasamy_news18_380
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிகக்கு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
திரு. நாராயணசாமியை  ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள்.
புதுச்சேரியில் சமூகநல்லிணக்கம் தழைத்தோங்க காங்கிரஸ் வேட்பாளர் திரு. நாராயணசாமிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Leave a Reply