புதிய தலைமுறை மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு: பாஜக பாணியில் கருத்து உரிமையை நசுக்குகின்றது அதிமுக அரசு

2411 Views

புதிய தலைமுறை மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு: பாஜக பாணியில் கருத்து உரிமையை நசுக்குகின்றது அதிமுக அரசு!

mhj1 (2)

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் போராட்டங்கள் குறித்து நடைபெற்ற வட்டமேசை விவாத நிகழ்ச்டசி தொடர்பாக அத்தொலைக்காட்சி மீதும் அதில் பங்குக் கொண்ட இயக்குனர் அமீர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை வன்மையாக மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது.

இந்த வட்ட மேசை விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக புதியதலைமுறை தொலைக்காட்சி மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவுச் செய்திருப்பது ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறிக்கும் பாசிச நடவடிக்கையாகும்.

கோவையில் இந்து முன்னணியை சேர்ந்த சசிகுமார் படுகொலையை தொடர்ந்து சங்க பரிவார் அமைப்பினர் சட்டத்தை தம் கையிலெடுத்துக் கொண்டு வர்த்தக நிறுவனங்களை சூறையாடி பிரியாணி அண்டா முதல் செல்பேசிகள் வரை கொள்ளையடித்துச் சென்றது ஊர் அறிந்த உண்மை. இந்த உண்மையை இந்த விவாத மேடையில் எடுத்துச் சொன்ன இயக்குனர் அமீர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . இந்த செயல் எடப்பாடி அரசு மத்திய பாஜகவின் அடிமை அரசு என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

இதே அளவுகோளை பயன்படுத்தினால் தினந்தோறும் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்குக் கொள்ளும் பல்வேறு சங் பரிவார் அமைப்புகளின் பிரதிநிதிகள்  மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவுச் செய்திருக்க வேண்டும்.

பாஜக மற்றும் சங்க பரிவார் அமைப்பினர் மீது விமர்சனங்களை பதிவுச் செய்யும் ஊடகங்கள் மீது பாஜக ஆளும் மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் பழிவாங்கல் நடவடிக்கை போன்றே எடப்பாடி அரசும் புதிய தலைமுறை மீது வழக்கை பதிவு செய்துள்ளது. பாஜக  ஆளும் அரசுகளின் பாணியில் கருத்து உரிமையை பறித்துள்ளது.

உடனடியாக புதிய தலைமுறை மீதும் இயக்குனர் அமீர் மீதும் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கோருகிறேன். அதிமுக அரசின் இந்த பாசிச போக்கை ஜனநாயக இயக்கங்கள் ஓரணியில் நின்று முறியடிக்க உறுதி எடுத்துக் கொள்வோமாக.

இவண்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply