பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!

1465 Views
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நடந்துமுடிந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மதிப்பெண்கள் மட்டும் அளவுகோல் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு, மாணவ, மாணவிகள் அவரவர் எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு உள்ள புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் பயனுள்ளதாக மாற்றி வாழ்க்கையில் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவ மாணவியர்கள் இதனை நிரந்தர தோல்வி என்று கருதத் தேவையில்லை. தோல்விகள் பல சாதனையாளர்களுக்கு வெற்றியின் முதல் படியாக அமைந்துள்ளது. மனவருத்தத்திற்கு இடமளிக்காமல், உடனடியாக மறுதேர்விற்கு விண்ணப்பித்துத் தேர்வுகளை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply