பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!

1705 Views
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!
mhj1 (2)
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து செய்தி:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மதிப்பெண்கள் மட்டும் அளவுகோலாக எடுத்துக்கொள்ளாமல், மாணவ, மாணவிகள் எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு உள்ள புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி  எதிர்காலத்தில் நம்பிக்கையோடு வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்.
இத்தேர்வில் தேர்ச்சியடையத் தவறிய மாணவ மாணவியர்கள், மனவருத்தத்திற்கும், விரக்திக்கும் இடமளிக்காமல், உடனடியாக மறுதேர்விற்கு விண்ணப்பித்து விடாமுயற்சி உடையோர் விழுந்தாலும் வீரியமாய் எழுவார்கள் என்ற அடிப்படையில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply